தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும்: கோவையில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேச்சு

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடைபெறும் உலக தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது. வேளாண் பல்கலை, உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மாநில திட்டக்குழு இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 



இந்த மாநாட்டில், அண்ணா பல்கலை.,யின் முன்னாள் துணை வேந்தர் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழை இணையத்துடன் இணைக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின்றன. இந்த கட்டுரைகளை தமிழ் இணையத்துடன் இணைத்தால் அது தமிழ் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும். கடந்த 1980-ம் ஆண்டு முதல் இதற்காக செயலாற்றி வருகிறோம்.

தமிழ் மொழிக்கான பிரத்தியேக தேடுதளம் ஒன்றை அமைக்கும் போது, விக்கிப்பீடியாவில் தமிழ் முதல் மூன்று மொழிகளில் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அவர்கள் வித்தியாசமான சிந்தனைகள் கொண்டவர்கள் என்று மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் பேசுகையில், "தற்போது பல்வேறு மென்பொருள் கட்டுமான நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மென்பொருட்களில் தமிழ் மொழியினை நிறுவதல் தொடர்பான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த பின் கட்டாயமாக தமிழ் இணைய பயன்பாட்டாளர்கள் அதிகரிப்பார்கள்." என்றார். 



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...