சூயஸ் ஒப்பந்தத்தை எதிர்த்து கோவையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., கைது

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: சூயஸ் நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் கையெழுத்திட்டுள்ள குடிநீர் விநியோக ஒப்பந்த்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் மாநகராட்சி நிர்வாகம் 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க., சார்பில் தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.



கோவையைச் சேர்ந்த அமைச்சர் வேலுமணி, சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.



மேலும், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி மறுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ., கார்த்திக் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...