உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு : அழுகிய மீன்கள் பறிமுதல்

கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அழுகிய நிலையில் இருந்த பத்து கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் அழுகிய நிலையில் இருந்த பத்து கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் மாநகரில் உள்ள பெரும்பாலான ஆவின் பாலகங்களில் சோதனை நடத்தினர். இந்த நிலையில், உக்கடம் பகுதிகளில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.



அங்கு மொத்தமுள்ள 110 கடைகளில் மீன்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் 48 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மீன்கள் நல்ல நிலையில் உள்ளதா? அதனைப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டிகள் நல்ல நிலையில் உள்ளதா? பதப்படுத்த ஏதேனும் ரசாயனங்கள் போடப்பட்டுள்ளதா? என்பவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறுகையில், "ஆய்வின் போது மீன்களை விற்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என விற்பனையாளர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீன்கள் சுத்தம் மற்றும் சுகாதாரமானதாக விற்பனை செய்யப்படுகிறதா? என பார்க்கப்பட்டது. மீன் செதில்களை குளக்கரையில் கொட்டக்கூடாது என்றும், மீன்களை பதப்படுத்த அதற்கேற்ற நீல நிற ஐஸ் கட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...