ஆலாந்துறை ஈஷா கிராம மருத்துவமனையில் 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் வரும் 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : ஆலாந்துறையில் உள்ள ஈஷா கிராம மருத்துவமனையில் வரும் 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக ஈஷா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது குறித்து ஈஷா கிராம மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் கீழ் ஆலாந்துறையில் ஈஷா கிராம மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, வரும் ஜூலை 7-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, பக்கவாதம், வலிப்பு நோய் போன்ற நரம்பியல் நோய்களுக்கும்,  பல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை இலவசமாக வழங்கப்படும். தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக பல் எக்ஸ்-ரே எடுக்கப்படும் மற்றும் சலுகை விலையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்படும்.

மேலும், பொது மருத்துவப் பிரிவின் கீழ் வரும் அனைத்து உடல் நல கோளாறுகளுக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனைகள் பெறலாம். மருந்து, மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94425 90021, 0422-2651298 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...