கோவை : பாரம்பரியத்துக்கு திரும்புவதோடு, உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத இயற்கை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட 'நம்ம ஊரு சந்தை', வடகோவை மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவையில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வருகின்றது. மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் சந்தை நடைபெறுகிறது.
இதில், இயற்கை வழி விவசாய விளைபொருட்கள், தேன், சிறு தானிய தின்பண்டங்கள், மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள், மதிப்புக் கூட்டிய உணவுப் பொருட்கள், மர விளையாட்டு சாமான்கள் என, இயற்கை சார்ந்த பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
நடைபெறவிருக்கும் நம்ம ஊரு சந்தையில் தற்சார்பு வாழ்வியலுக்கான மரபுக் கூடல் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த உமாமகேஸ்வரன் உடல் சுத்தப் பொடிகள் செய்முறை மற்றும் விளக்கமளிக்கிறார்.
பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி, இயற்கை வழி வேளாண்மையில் வாழை சாகுபடி தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சியளிக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவ அரங்கு, சிறார் அரங்கு, விவசாய அரங்கம் போன்ற அரங்கங்களின் கீழ் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.