தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும்- சி.ஐ.டி.யு.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

 

அரசு போக்குவரத்து சங்க ஊழியர் மாநாடு உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சட்டசபையில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான மானிய கோரிக்கையில் முறையான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தவோ அல்லது தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றாத வகையில் மானிய கோரிக்கை அறிவிப்புகள் உள்ளது. 

பேருந்துகள்

தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கி வரும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டி உள்ளது. அதை மாற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசு அதனை செய்யாமல் நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு ஏற்கனவே கொண்டு வந்த இதுபோன்ற திட்டம் வெற்றி அடையவில்லை. இதில், அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கூட்டம் கூட்டி போராட்டம் அறிவிப்பு வெளியிட உள்ளோம். நடத்துனர் இல்லா பேருந்து அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்.

நடத்துனர் இல்லா பேருந்து

சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து இயக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மோட்டார் வாகன சட்டப்படி நடத்துனர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது. 50 ஆயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதாக அரசே அறிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையில் வேலை வாய்ப்பினை உருவாக்க தொழிற்சாலைகள் உருவாக்கி வேலை வாய்ப்பினை அரசு உருவாக்க வேண்டும்.

கட்டண உயர்வால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பட்ஜெட்டில் 10 ஆயிரம் பேருந்துகளுக்கான தொகையை ஒதுக்கினால் தான் பேருந்து சேவை சிறப்பாக இருக்கும்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...