கோவை: மாநகர பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பத்மநாபன் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பத்மநாபன் கூறுகையில், "இத்திட்டத்திற்காக கடந்த ஜனவரி மாதம் தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆறு மாதம் ஆகியும் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அந்த தனியார் நிறுவனம் மட்டுமே அவர்களது இணையதளத்தில் ஒப்பந்தம் குறித்து செய்தி வெளியிட்டனர். எனவே சுயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தத்தின் நகல், வேலைக்கான உத்தரவு நகல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஆகியவற்றை உடனடியாக வெளியிடுமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இன்று மாலை அல்லது நாளை ஒப்பந்த நகல் வெளியிடப்படும் என்று உதாசீனமாக பதில் கூறுகிறார்.
இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்." என்றார்.

இதனை தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் மாமன்ற உறுப்பினர் பத்மநாபனை உக்கடம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.