உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு பயங்கரவாத முத்திரை: மத்திய அரசு மீது இயக்குநர் அமீர் கடும் தாக்கு

கோவை: ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின் போது மோதல் ஏற்பட்டது தொடர்பாக, இயக்குநர் அமீர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கோரி அமீர், கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜூலை 9-ம் தேதிக்குள் இருநபர் உத்திரவாதம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இயக்குநர் அமீர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில், குமரேசன், தனபால் ஆகிய இருவர் நீதிபதி கண்ணன் முன்னிலையில் சொத்து ஆவணங்களைத் தாக்கல் செய்து உத்திரவாதம் அளித்தனர்.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட அமீருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் பேசுகையில், "ஆளும் மத்திய அரசு உரிமைகளுக்காகப் போராடுபவர்களை சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது. அப்படிப் பார்த்தால், தமிழக மக்கள் அனைவரும் சமூக விரோதிகள் ஆவார்கள்.

சேலத்தில் உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க போராடுபவர்களை ஒடுக்குவது அதிகாரவர்க்கத்தின் பாசிச போக்கை காட்டுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது மக்களிடம் போராடும் சிந்தனை வரக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்டது. ஆனால், இவையெல்லாம் மக்களின் போராடும் சிந்தனையை மட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறி தான்," என அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...