தேர்தல் பிரச்சாரத்தின் போது அடிதடி: வானதி சீனிவாசன் உள்பட 7 பேர் மீண்டும் ஆஜர்

கோவை: 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகினர்.

கோவை: 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க.,வினருக்கும் அ.தி.மு.க.,வினருக்கும் இடையே ஏற்பட்ட அடிதடி தொடர்பான வழக்கில் பா.ஜ.க., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் கோவை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகினர். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், ஆர்.ஜி. நகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த அ.தி.மு.க., மண்டல தலைவர் ஆதிநாராயணுடன் தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இது தொடர்பாக, கடந்த 2016 மே மாதம் ஆதிநாராயணன் தரப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்தப் புகாரை அடுத்து வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேர் மீது வெரைட்டிஹால் சாலையில் அடிதடி வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்காக ஆஜரான வானதி சீனிவாசன் உள்ளிட்ட 7 பேரிடம், வழக்கு தொடர்பான விபரம் தெரியுமா என நீதிபதி இனியா கருணாகரன் கேட்டார். இதற்கு தங்கள் மீது பொய் வழக்குப் பதிந்துள்ளதாக அவர்கள் பதிலளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...