கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கோவை: கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் ஒரு வாரத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவை: கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்ததால் ஒரு வாரத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி முதல் 17 நாட்கள் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 21-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. 

கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் மீண்டும் 24-ம் தேதி கோவை குற்றாலம் அடைக்கப்பட்டது. பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டதாகவும், மீண்டும் அடைக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களால் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். இந்த நிலையில், ஒருவாரத்திற்குப் பின் குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...