பா.ஜ.க ஆட்சியில் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை - மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கோவை: பா.ஜ.க ஆட்சியில், எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: பா.ஜ.க ஆட்சியில், எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

கோவை ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகள் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நெல், சோளம், கம்பு,சிறு தானியங்கள், துவரம் பருப்பு, பாசி பருப்பு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் எனவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு நிர்ணயிப்பதில்லை என்றும் தனி அமைப்பே நிர்ணயம் செய்வதாககூறினார்.

மேலும், எந்த துறையிலும் சல்லி காசு கூட ஊழல் செய்யாத அரசாக, மத்திய பாஜக அரசு உள்ளதாக கூறிய அவர், ஸ்டெர்லைட் போராட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டதாக தூத்துக்குடி மக்களே சொல்லி வரும் நிலையில், பயங்கரவாத்தை அடக்க காவல் துறையும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் பயங்கரவாதிகள் ஊடுருவல் செயல்பாடு குறித்து யூகத்தின் அடிப்படையில் பேசியதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...