வணிக நோக்கத்துடன் தனியார் பள்ளிகளின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்க மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தடை விதித்துள்ளது.
வணிக நோக்கத்துடன் தனியார் பள்ளிகளின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்க மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி இயக்கனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில், வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது.
நீட் தேர்வு பயிற்சியில் சேர மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளி நேரங்களில் பாடங்களை மட்டுமே நடத்த வேண்டும். நீட் போன்ற பயிற்சிகள் அளிக்கக் கூடாது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் தவிர வேறு கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது. மீறும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.