எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கு : வரும் 23-ம் தேதி முதல் தினமும் விசாரணை

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை வரும் 23-ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை வரும் 23-ம் தேதி முதல் தினமும் விசாரணை நடத்த இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கட்சியின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் மனுவை வாபஸ் பெற்ற நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால், 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால், அவரை உச்சநீதிமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

புதிய நீதிபதி சத்ய நாராயணன் இன்று மாலை 4 மணிக்கு விசாரணையை தொடங்கினார். முதலில் இருதரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டறிந்தார். அதன்பின்னர் வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார். இதனால், இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...