கோவை: மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலும் புறநகர் பகுதிகளில் லேசான தூரல் மழைக்கும் வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களை பொறுத்தவரையில் நன்றாக வெயில் பதிவாகும். மாநகர் பகுதிகளில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
பகல் நேரங்களில் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி போன்ற புறநகர் பகுதிகளில் தூரல் மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவையைப் பொறுத்தவரையில் காற்றின் வேகம் 14 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது. வெப்பம் காரணமாக சில நேரம் சூழல் காற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது." என்றார்.