நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு குவிண்டாலுக்கு ரூ. 1,770 ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 220 உயர்த்தி ரூ.1,770 ஆக நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை ஒன்றரை மடங்கு உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 275 உயர்த்தி ரூ. 1,700 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 225 உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, பாசி பயறு உள்பட பல்வேறு தானியங்களின் ஆதரவு விலையும் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவாகும்.