இன்று வரும் தீர்ப்பின் படி தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: திருநாவுக்கரசர் கோவையில் பேட்டி

கோவை: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்க இருக்கும் தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.


கோவை: எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்க இருக்கும் தீர்ப்பு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட மாநகர காங்கிரஸ் சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் ஆய்வு கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருப்பது வரவேற்கத்தக்கது. தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அப்பகுதிகளின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.



இந்த தீர்ப்புக்கு பிறகு தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முடிவு எடுப்பதற்கு முன், அனைத்து கட்சிகளின் கருத்துகளை அறிந்து பின்னர் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். அரசு நினைத்தால் மூன்றே மாதங்களில் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்திவிட முடியும். அரசுக்கு எதிராக போராடுபவர்களை சிறையில் அடைத்தோ, துப்பாக்கிச் சூடு நடத்தியோ ஒடுக்கி விட முடியாது.

மக்களின் வாழ்வை பாதிப்படைய செய்யும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றக்கூடாது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும்." என்றார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...