மும்பையில் அடுத்த ஆண்டு சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சி : திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு

திருப்பூர் : மும்பையில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்துகொள்ள திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : மும்பையில் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்துகொள்ள திருப்பூர் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

திருப்பூரில் இண்டியா இட்மா சொசைட்டி சார்பில் ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு அந்த அமைப்பின் தலைவர் ஹரிகுமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அவர்கள் கூறியதாவது :- ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் ஜவுளி தேவைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான வணிக தளத்தையும், தீர்வையும் ஊக்குவிக்கும் கண்காட்சியாக 2-வது சர்வதேச ஜவுளி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கண்காட்சி வரும் ஜனவரி 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பாம்பே கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இதில், ஐரோப்பிய, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. ஆப்பிரிக்க ஜவுளித்தொழில் மேம்பாடு மற்றும் இந்திய ஜவுளி தொழில்நுட்ப இயந்திர தீர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஆப்பிரிக்காவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வர்த்தகத்திற்கான சந்திப்பாக அமைய உள்ள 2-வது சர்வதேச கண்காட்சியில் ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, கானா, தென்னாப்பிரிக்கா, தன்சானியா, தெற்கு சூடான் உள்ளிட்ட 32 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

இந்தக் கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழில்துறையினருக்கு கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு சர்வதேச ஜவுளி கண்காட்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்துகொண்டு, சர்வதேச நாடுகளுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...