கோவை பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட்:தவறுதலாக அனுப்பியதா மத்திய அரசு?

கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (25). இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014-ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

இந்த நிலையில், கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.

அப்போது வங்கி அதிகாரி, "பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் தவறுதலாக உங்களுக்கு வந்திருக்கும்." என்று கூறினார்.

பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...