குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் குழப்பங்கள் ஏற்படும் : கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கோவை: குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் எதிர்காலத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கோவை: குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் எதிர்காலத்தில் குழப்பங்கள் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது:- 

கோவை மாநகராட்சி சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் குறித்த ஒப்பந்தம் குறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை மாநில அரசோ, மாநகராட்சி நிர்வாகமோ வெளியிடவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தத்தை முழுமையாக வெளியிட வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும். எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கானாலை இந்த நிறுவனம் கட்டியதாக பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூயஸ் என்பது பன்னாட்டு நிறுவனம் என்பதாலும், தற்போதே வெளிப்படைத்தன்மை இல்லை என்பதாலும் எதிர்காலத்தில் இத்திட்டத்தில் குழப்பம் ஏற்படும். எனவே, இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...