சேலத்தில் கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சேலம்: சேலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் 24 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

சேலம்: சேலத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன் 24 மணிநேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான்.

சேலத்தில் கடந்த இரு தினங்களாக பேய் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகர் முழுவதும் தண்ணீரில் நிரம்பி வழிகின்றன. மேலும், 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில், நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் முகமது ஆசாத் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வீடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக ஓடையில் சிறுவன் தவறி விழுந்தான். ஓடையில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், சிறுவன் ஆசாத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான்.



இதைத் தொடர்ந்து, இன்று காலை கருவாட்டுப் பாலம் அருகே குப்பைகளை அகற்றும் போது, சிறுவன் முகமது ஆசாத் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பின்னர், இது குறித்து சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் சடலம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, உயிரிழந்த சிறுவன் முகமது ஆசாத்தின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ. 4 லட்சம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...