கோவையில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது : போலீசாருடன் வாக்குவாதம் நடத்திய உறவினர்கள்

கோவை: குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாரிடம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாரிடம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிஷார். இவர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் நிஷாரை கைது செய்வதற்காக நேற்று அவரது வீட்டுக்குச் சென்றனர். 

இந்த நிலையில், நிஷாரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது உறவினர்களும், நண்பர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற கூடுதல் போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிஷாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரிடமிருந்த 500 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...