கத்தியை காட்டி மிரட்டி 1.5 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளையடித்த மர்ம கும்பல்

கோவை: கோவை மதுக்கரை அருகே கேரள தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1.5 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளையடித்த கும்பல் மீண்டும் காரை பச்சாபாளையம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே கேரள தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1.5 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளையடித்த கும்பல் மீண்டும் காரை பச்சாபாளையம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பைபாஸ் சாலைகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல காரை பின் தொடர்ந்து வந்து கத்தி போன்ற ஆயுதங்களைக் காட்டி காரையும் காரில் உள்ளவர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளைக் கடத்தும் கும்பலின் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று திருச்சூரில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் கான்சிங், பொருட்களை கொள்முதல் செய்ய அதிகாலை காரில் கோவை வந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கான்சிங் காரை மறித்து கத்தியை காட்டி 1.5 லட்சம் பணம் மற்றும் காரை பறித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று மாலை கொள்ளையர்களால் கடத்தப்பட்ட காரானது பச்சாபாளையம் அருகே நின்று கொண்டிருந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் காரை கைப்பற்றி கைரேகை ஆய்வுகள் செய்தும் அதேபோல கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 

பைபாஸ் சாலைகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர், இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் வாகன தணிக்கைகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...