வாழைகளைக் காக்கும் சேலைகள்: யானைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க விவசாயிகள் புது ஐடியா..!

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் மின்வேலிகள் அகற்றப்பட்ட நிலையில், யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் சேலையினால் ஆன வேலிகளை அமைத்து வருகின்றனர்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் மின்வேலிகள் அகற்றப்பட்ட நிலையில், யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் சேலையினால் ஆன வேலிகளை அமைத்து வருகின்றனர்.

பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதிகளான லிங்காபுரம், புதுக்காடு காந்தவயல், மொக்கைமேடு, இச்சிப்பாலி, தட்டப்பள்ளம், கோவில்மேடு உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அணை நிரம்பினால் மட்டுமே தண்ணீரில் மூழ்கிவிடும் பகுதிகளான இங்கு, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய அனுமதி பெற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை மற்றும் நாட்டுக்காய்கறிகளை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இப்பகுதி முழுவதும் வனத்தை ஒட்டியுள்ள இடங்கள் என்பதால் யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்க இந்த விளை நிலங்களை சுற்றி விவசாயிகள் சோலார் மின்வேலிகளை அமைத்திருந்தனர்.

இந்நிலையில், பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் தண்ணீர் அருந்த வரும் யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் எவ்வித கட்டுப்பாடுமின்றி அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்வேலிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இயற்கைக்குப் புறம்பாக அதன் இயல்பான நடமாட்டம் தடுக்கப்படுகிறது என சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகவேல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மின்வேலிகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற உத்திரவிட்டது. இதனையடுத்து, காவல்துறையினரின் உதவியோடு வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் அனைத்து மின்வேலிகளையும் அகற்றினர்.

சோலார் மின்வேலிகள் அகற்றப்பட்ட அன்றைய தினமே காட்டு யானைகள் புகுந்து 5,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைத்த விவசாயிகள், இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள வாழை உள்ளிட்ட பயிர்களை காக்க வேறு வழியின்றி தங்களது தோட்டங்களை சுற்றி சேலைகளால் வேலி அமைத்து வருகின்றனர். பல பல வண்ணங்களில் பல நூறு புடவைகளை வரிசையாய் கட்டி கண்ணைக் கவரும் வகையில் நூதன சேலை வேலிகளை உருவாக்கி உள்ளனர்.



ஒவ்வொரு விவசாயும் தனித்தனியே செலவழித்து குறைந்தபட்சம் ஐநூறு முதல் ஆயிரம் பழைய புடவைகளை வாங்கி, தங்களது பயிர்களை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனால், இப்பகுதி முழுவதும் பல கிலோமீட்டர் தொலைவிற்கு எங்கு பார்த்தாலும் சேலை சுவர்களாகவே காட்சியளிக்கின்றன. இதற்காக, பல்லாயிரக்கணக்கான புடவைகள் விவசாயிகளால் வாங்கப்பட்டுள்ளன. தற்போது பழைய புடவைகளுக்கு இப்பகுதியில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.



தோட்டத்தைச் சுற்றி 4 அடி உயரத்திற்கு பல்வேறு வண்ணங்களில் சேலைகள் கட்டப்பட்டு, அவை காற்றில் அசைந்தபடி இருப்பதால் இரவு நேரங்களில் கூட்டமாக வரும் யானைகள் இதனை கண்டு அஞ்சி உள்ளே நுழையாது என நம்புகின்றனர். கம்பி வேலிகளையே பீய்த்தெறிந்து விடும் யானைகளுக்கு நூல் புடவைகள் ஒரு பொருட்டல்ல என்றாலும், இந்த யுக்தி கொஞ்ச காலமாவது தாக்குப்பிடிக்கும். அதற்குள் இந்த அறுவடையையாவது செய்து விடலாம் என எதிர்பார்த்துள்ளனர் விவசாயிகள். வேலிகள் அகற்றியதால் பயிர்களுக்கு மட்டுமல்லாது தங்களது உயிர்களுக்கும் பாதுகாப்பில்லை எனக்கூறும் இப்பகுதி விவசாயிகள் இதற்கு மாற்று திட்டம் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...