இன்று தேசிய ஜி.எஸ்.டி. தினம்: வரிவிதிப்பால் முடங்கிப் போன பின்னலாடை நகரம்

திருப்பூர்: தேசிய அளவில் இன்று ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் கடந்த ஓராண்டில் பின்னலாடை நகரமான திருப்பூரில் 30 சதவீத தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு,குறு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


திருப்பூர்: தேசிய அளவில் இன்று ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் கடந்த ஓராண்டில் பின்னலாடை நகரமான திருப்பூரில் 30 சதவீத தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு, குறு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டது. இதற்கு, தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புக்கள் கிளம்பினாலும், காலப்போக்கில் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகரமாக இந்த வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5% இருந்து அதிகபட்சமாக 28% வரைக்கும் ஜி.எஸ்.டி. வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஜுலை 1-ம் தேதி தேசிய ஜி.எஸ்.டி., தினத்தை அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்தது, அதன்படி, இன்று நாடு முழுவதும் ஜி.எஸ்.டி., தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் பல்வேறு மாநிலங்கள் பயனடைந்துள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், பின்னலாடை நகரமான திருப்பூரை பொறுத்தவரை மிகவும் வருந்தத்தக்க ஒன்று என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து சிஸ்மா (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) பொதுச்செயலாளர் பாபுஜி கூறியதாவது :- ஜி.எஸ்.டி.,யை வரும் போது பசு மாதிரி பால் தரும் என்று தான் நினைத்து வரவேற்றோம். பின்னர், தான் அது புலி போல் பாய்ந்து அடிக்கக்கூடிய ஒரு செயல் என்று தெரிந்தது. ரூ. 500, ரூ. 1,000 என சிறு, குறு தொழில் நிறுவனங்களில் வர்த்தகம் நடைபெறும். அதற்கும் கூட ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு என்பது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் புதிய முதலீட்டாளர்களின் வரவு முற்றிலும் குறைந்துள்ளது. புதிய முதலீட்டாளர்களின் வருகை இல்லை எனவும் கூறலாம்.



மேலும், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பால் வங்கிகளில் பெறக்கூடிய சலுகைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, உள்ள சூழ்நிலையில் வருமானம் இல்லை என்றாலும், போட்ட கொள்முதல் கீழே போகக்கூடாது என்ற போராட்ட நிலைக்கு வந்து விட்டோம். அரசாங்கம் வேண்டுமானால் மார்தட்டிக் கொள்ளட்டும் நாங்கள் தொழில் துறையினருக்கு நன்மை தான் செய்கின்றோம் என்று, ஆனால், அரசைப் பொறுத்தவரையில் தவறான கொள்கை முறையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசு குழு அமைத்து ஜி.எஸ்.டி.,யால் ஏற்படும் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.



மேலும், ஜி.எஸ்.டி.,யால் பின்னலாடை நிறுவனம் மட்டுமல்லாது, அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி நம்பிக்கையை இழந்து விட்டோம். ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்களுக்கும், சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கும் ஒரே வரிவிகிதம் என்பது வருந்தத்தக்கச் செயலாகும். எங்களைப் பொறுத்தவரை ஜி.எஸ்.டி., என்பது தொழில் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. ஜி.எஸ்.டி.,யால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளோம், இவ்வாறு அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...