உடல்நலக் குறைவால் கிணத்துக்கடவு முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டியார் காலமானார்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் தனது சகோதரர் சண்முகத்துடன் தோட்டத்து விட்டில் தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., காட்டம்பட்டி கந்தசாமி வசித்து வந்தார். இவர், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் கோவை தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் 12.30 மணியளவில் சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது.

இவரது உடலுக்கு இறுதிச் சடங்கு இன்று மாலை 7 மணியளவில் அவரது இல்லத்திற்கு அருகே நடைபெறுகிறது. இதனையடுத்து, கோவை தெற்கு மாவட்டம் உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தி.மு.க.,வினர் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டனர். இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன், கலை இலக்கிய பேரவை உமாபதி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் உட்பட தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் அவரது வீட்டிற்கு சென்று உறவினரிடம் துக்கம் விசாரித்தனர்.

காட்டம்பட்டி கந்தசாமி, 1989-1991 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1972 -1977 வரை மாநிலக் கூட்டுறவு வங்கி இயக்குநராகப் பதவி வகித்துள்ளார். மேலும், சிறு வயது முதலே தி.மு.க.,வின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு 1960-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம், ஈழப் பிரச்சினை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...