நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார் தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளாவுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள், தங்களுக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் எனக் கூறி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில மாநில அரசுகள் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் சமூகத்தில் அங்கீகாரம் அளித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், அரசின் பல்வேறுத் துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, தமிழகத்தில், காவல்துறையில் பிரித்திகா யாஷினி, நஸ்ரியா உள்ளிட்ட திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 



இந்த நிலையில், இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சத்தியஸ்ரீ சர்மிளா(36) பதவியேற்றுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலில் சத்தியஸ்ரீ சர்மிளா வழக்கறிஞராகப் பதிவு செய்த அவர், இன்று முறைப்படி பதவியேற்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக எனக்கு ஏராளமானோர் உதவியுள்ளனர். நிறையக் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த, உதவி செய்த அனைவருக்கும் நன்றி. 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இன்று நீதித்துறையில் நான் சேர்த்துள்ளேன். அனைத்துத் துறையிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும். எனது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்னாலான உதவியை செய்வேன்" என்றார். 

11 ஆண்டுகளுக்கு முன்னதாக, வழக்கறிஞராக தகுதி பெற்றிருந்தும், திருநங்கைகளுக்கு என ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் பதவியேற்க மாட்டேன் எனக் கூறி அதனைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...