உதகையில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய ரசாயன நீர் : மின் இணைப்பை துண்டித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

நீலகிரி : உதகையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீர் அணைகளில் கலந்து வருவது தெரிய வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நீலகிரி : உதகையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீர் அணைகளில் கலந்து வருவது தெரிய வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 



உதகையை அடுத்த சாண்டிநள்ளா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஜெனலட்டின் கேப்சிகம் மருந்துகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீர் காமராஜர் மற்றும் பைக்காரா அணைகளில் நேரடியாக கடும் துர்நாற்றத்துடன் கலந்து வருகிறது.

இதனால், தொழிற்சாலையை ஓட்டியுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் மக்கள், ரசாயன கலந்த கழிவு நீர் செல்லும் கால்வாயில் இருந்து உற்பத்தியாகும் கொசுகளினால் ஏற்படும் நோய்கள் மற்றும் ஆஸ்துமா போன்ற கொடிய நொய்களுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டது. 

இந்த சூழலில், அப்பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 16 கிராமங்களில் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் எருமை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த ரசாயன கலந்த தண்ணீரை அருந்தியதால் பல வளர்ப்பு எருமைகள் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதாக பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

தொடர்ந்து, இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுத்திகரிக்கப்படாமல் அணைகளில் நேரடியாக ரசாயனம் கலந்த கழிவு நீர் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால், அந்த தொழிற்சாலை நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்தார். இதனையடுத்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே அணைகளில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், சித்தரிக்கப்பட்ட நீர் அணைகளில் கலக்கப்படாததால், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இன்று அதிகாலை அந்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பைத் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தொழிற்சாலையில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...