கோவை - கரூர் இடையிலான தெற்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கோவை: கோவை மாவட்டம் செலக்கரச்சல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் தெற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் செலக்கரச்சல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் தெற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் ஹரிஹரனிடம் மனு அளித்தனர். அப்போது, விவசாயிகள் கூறியதாவது :- ஆராக்குளம், செலக்கரச்சல், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை வழியாக தெற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இணைப்பு சாலைகளாக இரண்டு சாலைகள் இருக்கும் நிலையில், தெற்கு புறவழிச்சாலை என்பது தேவையற்றது.

மேலும், தெற்கு புறவழிச்சாலை குறித்து விவசாயிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் விவசாயிகளின் நிலத்தை அளந்து சென்று இருக்கின்றனர். மேலும், புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் 800 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தை கைவிடவேண்டும். இது தொடர்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டத்தினை நடத்தி, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளனர், இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...