பி.எஸ்.ஜி. ராஜன் நினைவாக மல்லேகவுண்டன்பாளையத்தில் இருதய நல மையம் : மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

கோவை: பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ வி.ராஜன் நினைவாக பல்லடம் மல்லேகவுண்டன்பாளையத்தில் இலவச இருதய நல மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார்.


கோவை: பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ வி.ராஜன் நினைவாக பல்லடம் மல்லேகவுண்டன்பாளையத்தில் இலவச இருதய நல மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி திறந்து வைத்தார்.

பல்லடம்-கரடிவாவி சாலையில் மல்லேகவுண்டன்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை பி.எஸ்.ஜி. அறக்கட்டளை தத்தெடுத்துள்ளது. அந்த கிராமத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வரும் பி.எஸ்.ஜி. அறக்கட்டளை, அந்த ஊர் மக்கள் பயன்பெறும் வகையில் இருதய நல மையத்தை நிறுவியுள்ளது.

வி.ராஜன்

பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முன்னாள் அறங்காவலராக பதவி வகித்த ஸ்ரீ வி.ராஜன் நினைவாக இந்த இருதய நல மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி கலந்து கொண்டு இலவச இருதய நல மையத்தைத் திறந்து வைத்தார். 

விழாவில் பி.எஸ்.ஜி. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, இதய நோய் தொடர்பாக மல்லேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது.

ஐந்து வழிமுறைகள்

விழாவில், பி.எஸ்.ஜி மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேந்திரன் பேசியதாவது, "நமது உடல் உறுப்புகளில் இடைவெளி இல்லாமல் செயல்படும் உறுப்பு இருதயம். நாம் அதனை முறையாக பாதுகாக்க வேண்டும். இதயத்தை பாதுகாக்க ஐந்து வழி முறைகளை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

காலை உணவு, தினமும் 20 முதல் 30 நிமிட உடற்பயிற்சி, காலை மதிய மற்றும் இரவு நேர உணவுகளின் இடையில் ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். இது மட்டுமல்லாது, தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எலக்ட்ரானிக் பொருட்களை உபயோகிக்காமல் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வோம். ஆழ்ந்த தூக்கம் இதயத்தை வலிமைப்படுத்தும். ஐந்தாவது வழிமுறையாக, ஒரே இடத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் அமரக்கூடாது. குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறிது நேரம் எழுந்து நிற்கவோ அல்லது நடக்கவோ செய்தால் இதயம் நன்றாக இருக்கும். 

இன்றைய காலகட்டத்தில் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவது வேதனையளிக்கிறது. இது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 

மேற்கூறிய ஐந்து வழிமுறைகளை கடைபிடித்தால் மல்லேகவுண்டன்பாளையத்தை சேர்ந்த மக்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக எந்த மருத்துவமனைக்கும் செல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

 

இதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து பி.எஸ்.ஜி. நிர்வாகத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...