வரத்து குறைவால் புதிய உச்சத்தை தொட்ட உருளைக் கிழங்கின் விலை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளுக்கு வரும் உருளைகிழங்கு வரத்து குறைந்தது - போதிய வரத்து இல்லாததால் உச்சத்தை தொட்ட உருளைக்கிழங்கின் விலை, ஒரு மூட்டை 2,150 ரூபாயாக விலை உயர்வு.



கோவை: மேட்டுப்பாளையம் ஏல மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகளின் வரத்து குறைவால், ஒரு மூட்டைக் கிழங்கின் விலை புதிய உச்சத்தைத் தொடும் வகையில் உயர்ந்துள்ளது. 

மேட்டுப்பாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகள் மட்டுமின்றி கர்நாடகா, குஜராத், ஆக்ரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் லாரிகள் மூலம் டன் கணக்கில் உருளைக்கிழங்குகள் கொண்டு வரப்படுகின்றன. இம்மண்டிகளில் தரம் பிரிக்கப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயிக்கப்பட்டு, மொத்த வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



தற்போது, நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த சீசன் வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும். வழக்கமாக, இந்த ஜூன் மாத காலகட்டத்தில் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு தினசரி 500 முதல் 600 டன் வரை உருளைக்கிழங்கின் வரத்து இருக்கும். அப்போது, நீலகிரி கிழங்கின் விலை மூட்டை ஒன்றுக்கு ரூ. 700 முதல் ரூ. 900 வரையே விலை போவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு தற்போது 50 முதல் 60 டன் வரையே வரத்து உள்ளது. இதனால், இன்றைய நிலவரப்படி நீலகிரி கிழங்கின் விலை 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ. 1,600 முதல் ரூ. 2,150 வரை விலை போகிறது. வெளிமாநில கிழங்கின் விலை மூட்டை ஒன்று ரூ. 800 முதல் ரூ. 1,200 வரை விலை போகிறது. 



நீலகிரி மாவட்டத்தில் இவ்வாண்டு உருளைக்கிழங்கின் விளைச்சல் குறைவாக இருப்பதே வரத்து சரியக் காரணம் என்கின்றனர் மண்டி உரிமையாளர்கள். மேலும், கடந்தாண்டு போதிய விலை இன்மையால் நஷ்டம் அடைந்த விவசாயிகள், இவ்வாண்டு உருளைக்கிழங்கு விவசாயத்தைக் குறைத்து அதிக அளவில் மலைக்காய்கறிகள் விவசாயப் பணிகளை மேற்கொண்டதால் இந்த விலை ஏற்றம் கண்டுள்ளது. அத்துடன் அண்டை நாடான இலங்கைக்கும் ஏற்றுமதி செய்யும் நீலகிரி உருளைக்கிழங்கின் அளவு உயர்ந்துள்ளதால் இந்த விலை உயர்வு மேலும் தொடர வாய்ப்புள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...