24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சியிடம் மார்க்சிஸ்ட் மனு

கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மாநகராட்சிக்கு 24 மணிநேர குடிநீர் வழங்குவது தொடர்பான பன்னாட்டு நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை 'சூயஸ்' என்ற பிரெஞ்சு நாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்., நடராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி., கருணாகரன், மாவட்ட செயலாளர் வி. ராமமூர்த்தி மற்றும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



அப்போது, மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ரகசியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், மக்கள் பிரதிநிதிகள் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...