யு.ஜி.சி.க்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் வரைவு சட்டம் தயாரிப்பு

யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்கவதற்கான வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.

யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்கவதற்கான வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. 

பல்கலைக் கழகங்களை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் ‘பல்கலைக் கழக மானியக் குழு’ (யுஜிசி) உருவாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களை ஒழுங்குமுறை செய்வது, அவற்றுக்குத் தேவையான நிதியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த மானியக் குழு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், யு.ஜி.சி.க்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படும். இதற்காக, பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் -1951 கலைக்கப்பட்டு, உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு சட்டத்தை பற்றிய கருத்துகளை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அடுத்த மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம்," எனக் கூறியுள்ளார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...