சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது மேலும் ஒரு வழக்கு

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைக்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி மீது போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இவர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் மாணவி வளர்மதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் அமீரின் படவிழா ஒன்றில் வளர்மதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி வளர்மதி மீது கலவரத்தைத் தூண்டியதாக போலீசார் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே, அவரைக் கைது செய்வதற்காக சென்னை போலீசார், சேலம் மகளிர் சிறைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நெடுவாசல் திட்டத்தை எதிர்த்து பேருந்துகளில் துண்டு பிரசாரம் விநியோகம் செய்ததற்காக வளர்மதி கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், உயர்நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...