உதகையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

நீலகிரி: மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று உதகையில் நடைபெற்றது.


நீலகிரி: மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம், தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கோவை, நீலகிரி தொண்டு நிறுவனங்கள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு குறித்த இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு நடைபெற்றது. 

இதனை பெண்கள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர், "இது வரை நான் பெண் என்று தனியாக பிரித்துப் பார்க்காமல் பல கட்டுப்பாடுகளை விதித்து என்னை என் குடும்பத்தார் வளர்த்ததில்லை. அதுபோல அனைவரும் பெண்களை சுதந்திரமாக செயல்படும் வகையில் அனைத்து பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் காவல்துறை, வழக்கறிஞர்கள், அரசுத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...