கோவையில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்: சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்கள் கைது

கோவை: மாநகருக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை: மாநகருக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக நீதி கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 60 வார்டுகளுக்கு குடிநீரை 24 மணி நேரமும் வழங்க மாநகராட்சி சார்பில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ரூ. 3,150 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சமூக நீதி கட்சி சார்பில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.

முன்னதாக செஞ்சிலுவை சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் குடிநீர் வழங்கும் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து பேரணியாக மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...