முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை: மூவர் கைது

திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மருமகன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேலூரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் ஊற்றுக்குளி சாலை கருமாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உறவினர் வகையில் மருமகன்.

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நேற்று காலை பனியன் நிறுவனத்திற்கு சென்று வருவதாக காரில் வெளியே சென்றுள்ளார். நீண்டநேரமாகியும் வராததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், செல்போன் இணைப்பு கிடைக்காமல் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவரது தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், சிவமூர்த்தியின் உடல் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டனர்.



இந்த நிலையில், சிவமூர்த்தியின் சொகுசு கார் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் வெங்கிளி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்து தப்பியோடிய விமல், கவுதமன், மணிபாரதி ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில் சிவமூர்த்தியை கடத்தி கொலை செய்து இரண்டு நாட்களாக காரில் வைத்து வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி இடையே பயணித்ததாகவும், இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் உடலை வீசி இருந்ததாகவும் தெரிவித்தனர்.



மேலும், சிவமூர்த்தி தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததால், அந்த பெண்ணின் கணவர் இந்த கொலையை செய்ததாக தகவல் அளித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...