கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்குக் கையகப்படுத்தப்படும் விவகாரம்: கோரிக்கையும்...! விளக்கமும்.!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையமானது 600 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரம் அடி ஓடு பாதையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும், சர்வதேச விமானங்களும் அதிக அளவில் இயக்க 12 ஆயிரம் அடி ஓடு பாதை தேவைப்படுகிறது. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என சொல்லக்கூடிய கோவை மாநகரின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலைய விரிவாக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை அடுத்து 2010-ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலங்களைக் கையகப்படுத்த பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒருபகுதியாக 624 ஏக்கர் நிலங்கள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள சின்னையம்பாளையம், இருகூர், நிலம்பூர், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டன. இதில், 461 ஏக்கர் பட்டா நிலங்கள், 28 ஏக்கர் பயன்படுத்தப்படாத புறம்போக்கு நிலங்கள், முப்படைகளுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.

இதனிடையே, விவசாய நிலங்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 900 எனவும், வீடுகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 1,500 எனவும் நிலம் கையெகப்படுத்துவது தொடர்பாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது உள்ள சந்தை மதிப்பின்படி இது மிகவும் குறைவு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், ஒரு சதுர அடிக்கு ரூ. 2,500 முதல் ரூ.3,000 வரை விலை நிர்ணயம் செய்வதே சரியானதாக இருக்கும் எனவும் அவர்கள் வலியுறுத்ரி வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், "சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு அதிக இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்கள். அதே போல, எங்களுக்கும் அதிக இழப்பீடு தொகை வேண்டும்," என்றார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அரசுக் கூடுதல் தலைமை செயலரும், நில நிர்வாக ஆணையருமான மோகன் பியாரே நிலங்கள் கையகப்படுத்தும் இடங்களுக்கு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் அப்பகுதி விவசாயிகள், மக்கள் உரிய விலை நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என மனுக்கள் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நிலங்கள் 24 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல பகுதி வாரியாக இழப்பீடு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து இண்டஸ்ட்ரியல் அசோசியேசனை சேர்ந்த விக்ரம் விஜய் கூறுகையில், "கோவை வளர்ச்சியடைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அதில், எந்தவிதமான சந்தேகமும் இல்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்காகப் பல கட்டங்களாக நிலங்கள், விவசாய நிலங்கள், புறம்போக்கு, ரெசிடென்சியல் எனப் பிரிக்கப்பட்டு இழப்பீடுகள் வழங்க விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், பெரிதும் பாதிக்கப்படுவது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் வைத்திருப்போர் தான். சதுர அடிக்கு ரூ. 1,500 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சந்தை மதிப்புப்படி அது ரூ. 2500 முதல் ரூ.3,000 வரை மதிப்பு ஆகும்.

அதே சமயம் கட்டடங்களுக்கு எந்த விலையும் இன்று வரை நிர்ணயம் செய்யவில்லை. மேலும், மாற்று இடங்கள் குறித்த அறிவிப்பு குறித்தும் எந்தத் தெளிவான தகவல் இல்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பான வீடுகளையும், உழைப்பினையும் இழக்க உள்ள மக்களுக்கு அரசாங்கம் நம்பிக்கையாக செயல்பட வேண்டும். உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். விரிவாக்கப் பணிகளால் பலர் வாழ்வாதாரத்தையே இழக்கப் போகிறார்கள் அவர்களுக்கு உறுதுணையாக அரசாங்கம் செயல்பட வேண்டும். 8 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஒரு உயர்மட்டக் குழு ஆய்வுக்கு வந்துள்ளது. எங்கள் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும், அதற்கான மாற்று என அந்தக் குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்," என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) மற்றும் நில எடுப்பு அலுவலர் ப. சிதம்பரம் கூறுகையில், "விரிவாக்கப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நிலம் எடுப்பு தொடர்பாக யாரும் எதிர்ப்பு இல்லை. விலை நிர்ணயம் சரியான மதிப்பீட்டில் தான் உள்ளது. விரைவில் மதிப்பீட்டில் உள்ளவாறு இழப்பீடுகள் வழங்கப்படும். இழப்பீடு தொகை அதிகப்படுத்தப்படாது," என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...