காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு; மூக்கைப் பிடிக்கும் பயணிகள்

கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.

கோவை: காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீர் வெளியேறி பயணிகளை அவதிக்குள்ளாக்கியது.

காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நான்கு தளங்கள் உள்ளன. இங்கு திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் முதல் தளத்தில், கழிவுநீர் குழாயில் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்டு அவ்வப்போது சரி செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், தாய்மார்கள் பாலூட்டும் அறையின் வாசலில் இன்று காலை மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறியது. இதனால், பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் கடும் அவதியடைந்தனர்.

"ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தூய்மை நகரங்கள் ஆய்வு, அமைச்சர்களின் வருகை போன்ற நாட்களில் மட்டுமே சுத்தமாக இருப்பது போல் பராமரிக்கப்படுகின்றன." என்று குற்றம்சாட்டுகிறார் தினமும் கோவையில் இருந்து திருப்பூர் சென்றுவரும் பயணி ஒருவர்.

இது தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்களிடம் புகாரளிக்கப்பட்டு கழிவுநீர் உடைப்பு சரி செய்யப்பட்டது.



பேருந்து நிலையங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், பேக்கரிகள் போன்ற கடைகளால் அதிக அளவு கழிவு நீரும், குப்பைகளும் உருவாவதாக பெரும்பாலானோர் புகார் தெரிவிக்கின்றனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...