வால்பாறையில் தொடர் மழை: 154 அடியை எட்டியது சோலையார் அணை

வால்பாறை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள சோலையார் அணை 154 அடியை எட்டியது.

வால்பாறை: வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள சோலையார் அணை 154 அடியை எட்டியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிகுளம்-ஆழியார் திட்டத்தின் முக்கிய அணையாக உள்ளது சோலையார் அணை. இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர் மின் உற்பத்திக்குப்பின் பரம்பிகுளம் வழியாக ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்பட்டு, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது.



வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் சிற்றோடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணைக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

160 அடி உயரமுள்ள சோலையார் அணையில் கடந்த மாதம் 4 அடியே நீர் இருந்த நிலையில் தற்போது நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 154 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது.



மழை அளவு

மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு பின்வருமாறு:-

வால்பாறை 26.மி.மீ., சின்னகல்லாரில் 27 மி,மீ., நீரார் அணை 23 மி.மீ., சோலையார் அணையில் 29 மி,மீ., மழை பதிவாகி உள்ளது. சூலூர் 2 மி.மீ., வேளாண் பல்கலை., 5.20 மி.மீ.,  பீளமேடு 0.80 மி.மீ., பொள்ளாச்சி 7 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...