கோவையில் குடிநீர் வினியோகம் தொடர்பாக வதந்தி: போலீசாரிடம் மாநகராட்சி நிர்வாகம் புகார்

கோவை: கோவையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



கோவை: கோவையில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன், மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, 26 ஆண்டுகளுக்கு, சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து, இனி குடிநீர் கட்டணத்தை யார் விதிப்பார்கள்? குடிநீர் கட்டணம் உயருமா? பொது குழாய்களின் நிலை என்ன? போன்ற கேள்விகள் எழுந்தது.

குடிநீரை தனியார் மயப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து, சூயஸ் நிறுவனம், சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கவும் மற்றும் அவற்றை பராமரிக்கும் பணிகளில் தான் ஈடுபடும் என்றும் கட்டணம் நிர்ணயிப்பது முதல் மற்ற அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சூயஸ் உடனான ஒப்பந்தம் குறித்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாநகராட்சி பொறியாளர் லட்சுமணன் மாநகராட்சி சார்பில், சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் உண்மைக்கு புறம்பாக வதந்தியை கிளப்பியவர்கள் மீது உக்கடம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504, 505(II)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...