ரத்தினபுரி கீழ் பாலம் வழியாகச் சென்று விபத்தில் சிக்கும் மக்கள்

கோவை: ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகர் ரயில்வே கீழ் பாலம் கட்டுமான பணிகள் முடிவு பெறாத நிலையில் பொதுமக்கள் அவ்வழியாக வாகனங்களில் சென்று சிறு,சிறு விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.


கோவை: ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகர் ரயில்வே கீழ் பாலம் கட்டுமான பணிகள் முடிவு பெறாத நிலையில் பொதுமக்கள் அவ்வழியாக வாகனங்களில் சென்று சிறு, சிறு விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.

கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட ரத்தினபுரி அருகே உள்ள தயிர்டேரி-கண்ணப்பன் நகர் ரயில்வே கீழ் பாலம் பணிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தமிழக அரசால் ரூ.14 கோடி நிதியுடன் அறிவிக்கப்பட்டது. தற்போது அங்கு கீழ் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ரத்தினபுரி வழியாக சிவானந்தா காலனி செல்லவும், கண்ணப்பன் நகர், தயிர்டேரி பகுதியிலிருந்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லவும் இந்த ரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இவ்வழியாக ரயில்வே கிராசிங்கை கடந்து தான் மக்கள் செல்லும் சூழ்நிலை நிலவி வந்தது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.

90 சதவீதம்

பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதிலிருந்தே வாகனங்கள் 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சங்கனூர் பாலம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இதனிடையே ரயில்வே கீழ் பாலம் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தற்போது சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பாலத்தின் மீது வாகனங்கள் உரசாமல் இருக்க தடுப்பான்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.



இந்நிலையில், கீழ் பாலம் கட்டுமான பணிகளுக்காக தற்போது எந்த தடுப்புகளும் இல்லாமல் காணப்படுகிறது. கீழ் பாலம் வழியாக செல்ல இதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். சாலை இன்னும் அமைக்கப்படாத காரணத்தினால் மணல் மேடுகள் உள்ளன அதில் இருசக்கர வாகனங்கள் செல்லும் போது நிலைதடுமாறி சிலர் கீழே விழுந்து விடுகின்றனர்.



இது குறித்து அவ்வழியாகச் செல்லும் ராஜ்குமார் என்கிற வாகன ஓட்டி கூறுகையில், "பாலம் பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். தற்போது பாலம் திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வழியாக சென்றால் மட்டுமே விரைவாக அலுவலகங்களுக்கும் மற்ற பணிகளுக்கும் செல்ல முடிகிறது. சுற்றிச் செல்வதால் 30 முதல் 40 நிமிடங்கள் காலதாமதம் ஏற்படுகின்றது." என்றார்.



பாலத்தின் கீழே செல்லக்கூடாது என தடுப்புகளை அமைத்தாலும் அதனை ஒரு சிலர் அகற்றிவிட்டு பயணிக்கின்றனர். காவல்துறையினர் இதனை உடனே கண்காணித்து விபத்துகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருகில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து கீழ் பாலம் பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், "90 சதவீதம் கோவை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமையாக அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிடும். அதுவரை பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...