மேட்டுப்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய இயற்கை ஆர்வலர்கள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியின் சாலையின் ஓரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையுடன் இணைந்து இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியின் சாலையின் ஓரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையுடன் இணைந்து இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி மற்றும் பிற இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும் போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளை பயன்படுத்துகின்றனர். அப்படி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி பாலித்தின் பைகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர்.



சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களையும் வீசிச் செல்கின்றனர். அந்த கழிவுகளை தெரியாமல் உண்ணும் வன விலங்குகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இந்நிலையில், கடந்த கோடை சீசனுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற மக்காத குப்பைகள் மற்றும் பாட்டில் கழிவுகளை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



பர்லியாறு பகுதியில் இருந்து கல்லாறு வரை சுமார் 15 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகளின் இரு புறங்களிலும் இருந்த பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை சுமார் இரண்டு டன் அளவிற்கு சேகரித்து அகற்றினர். மேலும், வனங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...