தேச நலனுக்கு எதிரானவர்களை சந்திக்கிறார் கமல்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

திருப்பூர்: கமலஹாசன் தேச நலனுக்கு எதிராக செயல்படுபவர்களைத் தான் தொடர்ந்து சந்தித்து வருகிறார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.



திருப்பூர்: கமலஹாசன் தேச நலனுக்கு எதிராக செயல்படுபவர்களைத் தான் தொடர்ந்து சந்தித்து வருகிறார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று திருப்பூர் கே.வி.ஆர் நகரில் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு அரசு மிகப்பெரிய தொகை வழங்குகிறது. ஆனால் அரசு, நிலத்தை பிடுங்குவதாக நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களால் வதந்தி பரப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டுவதன் மூலம் தி.மு.க., தமிழக மக்களுக்கான துரோகத்தை செய்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வரும் போது எதிர்ப்பு தெரிவிக்காத தி.மு.க., ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்நோக்கம் கொண்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர்களால் வைக்கப்பட்ட சந்தனம் குங்குமத்தை ஸ்டாலின் அழித்தது பெரும்பான்மை மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. அச்செயலை இந்து மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

கமலஹாசன் ராகுலை சந்திப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிரானவர்களான கேரளா முதலமைச்சர் பினரயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோரை அவர் சந்தித்து வருகிறார். அதன் மூலம் அவருடையது பெரிய கட்சி என்ற மாயையை ஏற்படுத்த முயல்கிறார்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...