உரிமைகளை வழங்க மறுத்தால் அரசு மீது வழக்கு: பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் கோவையில் பேட்டி

கோவை: கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உரிமைச்சட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் தமிழக அரசு மீது வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே ருங்கடா தெரிவித்தார்.


கோவை: கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உரிமைச்சட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் தமிழக அரசு மீது வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே ருங்கடா தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 

கண் பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த இட ஒதுக்கீட்டை ஆறு மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முறையாக அமல்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தியுள்ளது. இந்த விசயத்தில் தெளிவான புள்ளி விபரங்கள் கூட தமிழக அரசிடம் இல்லை. உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு வழங்கிய ஆணையின் படி மத்திய மாநில அரசுகள் பார்வையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படாததால் மத்திய அரசின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்காத தமிழக அரசு மீதும் வழக்கு தொடர தயாராக இருக்கிறோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் கண் பார்வையற்றவர்களுக்கு உணவு பாதுகாப்பு, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு உள்ளிட்ட வசதிகளையும் தமிழக அரசு கட்டாயம் செய்து தர வேண்டும்.

கண்பார்வையற்றோர் படிக்கும் வகையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் பிரெய்லி புத்தகத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கான உரிமைகளை வழங்க மறுத்தால் அரசின் மீது வழக்கு தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பார்வையற்றவர்களுக்கு சலுகைகள் வழங்காத ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் அரசு மீது அந்தந்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...