பசுமை வழிச்சாலை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் - மத்திய அரசு

டெல்லி: பசுமை வழிச்சாலை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: பசுமை வழிச்சாலை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை-சேலம் இடையே 277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியில் எட்டு வழி பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் தொடங்கும் இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் வழியாக சேலம் புறநகர் பகுதி வழியாகச் சென்று இணைகிறது.

எதிர்ப்பு

பசுமை வழிச்சாலை அமைக்கும் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்ராயன் மலை, சேலம்-தர்மபுரியில் சேர்வராயன் மலைப்பகுதியும் ஐந்து மாவட்டங்களிலும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாலும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆங்காங்கே விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நிபந்தனைகள் 

இதற்கிடையே சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் வனம்- சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய நிபந்தனைகள் விதித்துள்ளது.

இது சம்பந்தமாக திட்டத்தின் தாக்கம் தொடர்பான மதிப்பீட்டு இயக்குனர் ரகு குமார் கோடாலி சென்னை கிண்டியில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை-சேலம் 277 கி.மீ. தூர பசுமை வழி சாலைக்கு வனம்-சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வனம்- சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் எந்த வகையில் பிரச்சினைகள் எழுப்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்.

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாக திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...