கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசு: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர்.

கோவை: தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்த பசுவை, கோவை மாவட்ட தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டெடுத்துள்ளனர். 

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் கிருஷ்ணகுமார் என்பவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வழக்கமாக மாடுகளை கட்டிவைத்திருப்பது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று இரவு பசு ஒன்று தோட்டத்தில் இருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தோட்டத்தின் உரிமையாளர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரர்கள், கயிறு கட்டி பசுவை தூக்க முயன்றனர். 



தொடர்ந்து, சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பசு பத்திரமாக மீட்கப்பட்டது. சிறு காயங்களும் இன்றி பசுவை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...