உங்களது குழந்தைகள் பயிலும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுள்ளதா எனத் தெரிய வேண்டுமா..?

குழந்தைகளுக்கு தரமுள்ள கல்வியை வழங்க நினைக்கும் பெற்றோர்கள், தங்களது மகன் பயிலும் பள்ளி சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

குழந்தைகளுக்கு தரமுள்ள கல்வியை வழங்க நினைக்கும் பெற்றோர்கள், தங்களது மகன் பயிலும் பள்ளி சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். 

வியாபாரமாகிய கல்வி :

தற்போதைய காலகட்டத்தில் மருத்துவம் முதல் அனைத்திலும் ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத இடமே கிடையாது. இதில், கல்விக்கு மட்டும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு சாதாரண பெற்றோர்களும், தங்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற ஆசையில், லட்சம் லட்சமாக தனியார் பள்ளிகளுக்கு கொட்டிக் கொடுத்து வருகின்றனர். மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் அடிப்படைக் கல்வியும் தேவை என்றாகிவிட்ட நிலையில், பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற சில பண முதலைகள், கல்வியை வியாபாரமாக்கி வருகின்றனர். சி.பி.எஸ்.இ., என்ற பெயரில் உரிய அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

எனவே, தனது பிள்ளைகள் பயிலும், பள்ளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டது தானா என்ற சந்தேகம் அனைத்து பெற்றோர்களிடமும் எழுந்துள்ள பொதுவான அச்சமாகும். இந்த நிலையில், தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.,யில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா..? என்பதைத் தெரிந்து கொள்ளப் பெற்றோர்களுக்கு இருவழிமுறைகள் உள்ளன. 

836 பள்ளிகள் மட்டுமே :

தமிழகத்தில் மொத்தம் 836 பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ.,யின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கணக்கில் அடங்காதவாறு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., என அடையாளப்படுத்திக் கொண்டு, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, இதனைக் கண்டறியும் வகையில் சி.பி.எஸ்.இ., யின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் (http://cbseaff.nic.in/cbse_aff/schdir_Report/userview.aspx) ஆராயலாம். அதில், தங்களது மகன் படிக்கும் பள்ளியின் பெயர் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை வைத்துக் கண்டறிய முடியும். 

புத்தகத்தில் வேறுபாடு :

அதே போல, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தகத்தில் பதிப்பகத்தில் வேறுபாடு காணப்படும். அதாவது, உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி, என்.சி.இ.ஆர்.டி.,(NCERT) புத்தகங்கள் மட்டுமே சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வழங்கப்படும். ஏனெனில், என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களின் அதிகபட்ச விலை ரூ. 550 மட்டுமே இருக்கும். ஆனால், பிற புத்தகங்கள் ரூ. 5,000 முதல் ரூ. 6,000 வரையிலான தொகை அடங்கும். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...