உதகை எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

நீலகிரி: உதகையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எச்.ஏ.டி.பி., மைதான சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: உதகையில் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் எச்.ஏ.டி.பி., மைதான சீரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உதகை எச்.ஏ.டி.பி., மைதானம் உள்ளது. இங்கு, தடகளம் மற்றும் கால்பந்து, வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆண்டுதோறும் இங்கு மாநில, தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்த மைதானத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.



இதைத் தொடர்ந்து, இந்த மைதானத்தைப் புனரமைக்க, மத்திய நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பு சார்பில் நிதி ரூ. 5 கோடியும், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ரூ. 2 கோடியும் ஒதுக்கப்பட்டது. இதில், இங்குள்ள தடகள மைதானத்தை 'சிந்தடிக்' ஓடுதளமாக தரம் உயர்த்தத் திட்டமிடப்பட்டது. இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. டெண்டர் எடுத்த நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள் பணியை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.



கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்தப் பணிகளை செய்து வந்தது. பல்வேறு காரணங்களால் இப்பணி தாமதமாக தொடங்கியது. இதனால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணி நிறைவு பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, தற்போது, பணியில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால், நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இங்குப் பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், விளையாட்டு வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.



இது குறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், "இங்கு முன்பு, நாள்தோறும் காலை, மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள, நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். மேலும், பல்வேறு பயிற்சிகளுக்கும், விளையாட்டு வீரர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், மைதானத்தின் பணிகள் விரைவாக நிறைவு பெற்றால், கால்பந்து, தடகளம் உட்பட பிற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிப்பதாக அமையும். இங்குப் பணியாற்றிய விளையாட்டு அலுவலர் ஓய்வு பெற்று சென்றார். இதனால், பணியில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.



Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...