கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வதந்தி: அமைச்சர் எஸ்.பி., வேலுமணி

கோவை: 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தவறாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தவறாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கு, ரூ. 3,100 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், குடிநீர் கட்டணம் உயருமா...? பொதுக் குழாய்கள் நீக்கப்பட்டு விடுமோ..? என்ற அச்சம் கோவை மக்களிடையே எழுந்துள்ளது. மேலும், கோவை குடிநீர் விநியோகம், தனியார் மயமாக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசுகையில், "கோவையில் சுமார் ரூ. 3,000 கோடி செலவில் 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.  பராமரிப்பு மட்டுமே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...