விரைவில் அறிமுகமாகிறது இளம் தலைமுறையினருக்கான 'ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம்'

கோவை: தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில்முனைவோர்களாக மாற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சிறு, குறுந்தொழில் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.



கோவை: தமிழகத்தில் இளம் தலைமுறையினரை தொழில்முனைவோர்களாக மாற்றும் ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என சிறு, குறுந்தொழில் துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஃபோர்ஜ் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். அப்போது. நாடு முழுவதும் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சிறு, குறு தொழில்துறையின் முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களின் அரியக் கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கது. தமிழக அரசும் மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, தமிழக அரசு அறிவித்துள்ள "இனோவேசன் வவுச்சர் ஸ்கீம்" எனப்படும் திட்டம் மூலம் மாணவர்களின் அரிய கண்டுபிடிப்புகளை முழு வடிவமாக்க ரூ. 2 முதல் ரூ. 5 லட்சம் வரை நிதி உதவி அளித்து வருகிறது. இதுபோன்று ஆண்டிற்கு 400 புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவ முடிவு செய்துள்ளோம். அதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிப்பதற்கான 'ஸ்டார்ட் அப் பாலிசி திட்டம்' அடுத்த மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும்.

இதேபோல, தமிழகத்திலுள்ள மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பலகலைக்கழகம் உட்பட 300 கல்லூரிகளில் தொழில் முனைவோர் மையம் துவங்கப்பட்டுள்ளது. மேலும், 150 கல்லூரிகளில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...